திரு அண்ணாமலை பா.ஜ.க

 திரு அண்ணாமலை பா.ஜ.க




தமிழ் நாட்டில் ஒற்றைக் குரலுடன் ஒலிக்கும் அனைத்து தி.மு.க ஊடகங்களும் கழிந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பலமாக உடைக்கப்பட்டிருக்கின்றன.திரு அண்ணாமலையால் வெகுமக்கள் முன்பாக அந்த காரியம் நடைபெற்றிருக்கிறது.இது உண்மையாகவே அற்புதமான ஒரு காரியம்.எளிதானதல்ல.

இந்த ஊடகங்கள் அனைத்துமே வேறு வேறு பெயர்கள் கொண்டவை.இவற்றின் உரிமையாளர்கள் வேறு வேறு நபர்கள்.அவர்களில் ஒருவர் கூட இந்த வெற்றுச் சித்தாந்திகளோடு தொடர்புடையவர்கள் அல்லர்.இதில் ஆர்வத்திற்குரிய விஷயம் இது.சென்னை ஊடகங்கள் கடந்த முப்பதாண்டுகளில் இந்த போலி சித்தாந்திகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.ஒருவகையில் சூழல் இவர்களால் கடத்தல் செய்யப்பட்டிருக்கிறது.இது முன் எப்போதையும் காட்டிலும் கடினமானது.இந்த ஒற்றைப்படையான சித்தாந்திகளை உடைத்து பொது மக்களுக்கு புரிய வைக்காமல் தமிழ் நாட்டில் எத்தகைய அரசியல் மாற்றங்களும் சாத்தியம் அற்றவை.அண்ணாமலைக்கு இந்த ஞானம் பிடிபட்டிருக்கிறது.அவர் இன்று பெருமளவில் இவர்களை உடைத்து இவர்களின் பின்னணிகளை,நோக்கங்களை பொது மக்கள் முன்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதனைச் செய்கிற அறிதலும் ,திறனும் உடைய பாஜ.க தலைவர்கள் இதுவரையில் தமிழ் நாட்டு பா.ஜ.க வுக்கு அமையவில்லை.பிற தலைவரின் பங்களிப்புகள் குறைத்து மதிப்பிடுவதற்கு உரியன அல்ல,என்றாலும் தமிழ் நாட்டு ஊடகங்கள் மக்கள் முன்னிலையில் உடைபடும் காரியம் முதன்முறையாக திரு அண்ணாமலையால் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது.

தமிழ் நாட்டில் பா.ஜ.கவின் முதல் வெற்றி என நான் கருதுவது இதையே.இரண்டாவதாக அவர் முன்னர் இருக்கும் சவால், பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரானது என்னும் பிம்பத்தை உடைப்பது.குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்னும் பிம்பத்தை உடைப்பது.இன்று இஸ்லாமியர்கள் இந்த போலிச் சித்தாந்திகளுக்கு கண்மூடித்தனமாக துணை போகிறார்கள்.பா.ஜ.க தலித்துகளுக்கு எதிரானது என்பது ஏற்கனவே உடைபட்டுவிட்டது.அகில இந்திய அளவிலேயே செயல் மூலமாக பா.ஜ.க அதனை உடைத்து நொறுக்கி விட்டது.தலித் மக்கள் மீது அதன் உண்மையான ஆர்வங்கள் தெரியத் தொடங்கி விட்டன.திரு கிருஷ்ணசாமி இதனை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.அவர் தான் சார்ந்த மக்கள் நலனில் ஆர்வம் கொண்டவர்.தமிழ் நாட்டில் திருமாவளவன் செய்து கொண்டிருப்பது ஒரு வேடிக்கை அரசியல்,பிழைப்பரசியல்.அவர் கட்சி இன்று வேறு நபர்களால் நடத்தப்படுகிறது.எனவே பா.ஜ.க மீது தலித் விரோதிகள் என்னும் பூதத்தை தொடர்ந்து இனியும் ஏவிக் கொண்டிருக்க முடியாது

கார்த்திகேயன்,ஆவுடையப்பன்,சவுக்கு சங்கர்,சீப்பு செந்தில் ,கார்த்திகை செல்வன் இன்னும் பல பத்திரிகையாளர்கள் உடைக்கப்பட்டு விட்டார்கள்.

புதிய தலைமுறை,சன் டிவி ,நியூஸ் 18,8,தமிழ் இந்து,ஆனந்த விகடன் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களைக் கொண்ட இவை அடிப்படையில் ஒற்றைக் குரல் கொண்டவையே.இந்த ஒற்றைக்குரல் தி.மு.க வின் சித்தாந்ததோடு தொடர்பு கொண்டது.இவர்களுக்கு என்ன சித்தாந்தம் வேண்டிக் கிடக்கிறது ?கொள்ளையும்,குடும்ப வாரிசு அரசியலும் ,ஊழலும் தானே இதுநாள் வரையில் இவர்களின் வரலாறு?என்றால் அது உண்மைதான்.ஆனால் அதற்கொரு போலி சித்தாந்தம் தேவை.பெரியாரை முன்வைத்துக் கட்ட முயலும் ஒரு போலிச் சித்தாந்தம் அவர்களுடையது.அதன் பின் நிற்பது கிறிஸ்தவ அரசியல்.இந்த பெரியாரிய சித்தாந்த நிலைபாடு உண்மையாகவே மத மாற்ற நிலைபாடு.

இங்கே கொள்ளைக்காரர்கள் மாத்திரமே மதமாற்றத்திற்கு ஆதரவாக விலைக்கு வாங்கும் நிலையில் இருப்பவர்கள் என்பதை பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. கிறிஸ்தவம் தங்களை ஆதரிக்கும் கொள்ளையர்களுக்கு இப்படியான போலிச் சித்தாந்தத்தை உலகம் முழுக்க வழங்கவும் செய்யும். இடத்திற்கு தக்க அவற்றுக்கு வேறு வேறு பெயர்கள்.

தமிழ் நாட்டில் அது பெரியாரியம்.பெரியார் உண்மையில் மிகவும் சிறியவர்.அவர் உண்மையாகவே ஒரு மடையர்.ஒரு படிக்கு மேலே சிந்திக்கும் திறனற்றவர்.அவருடைய வட்டித் தொழிலுக்கு ,பாதுகாப்புக்கு இந்த சித்தாந்தம் உபயோகம் என்பதால் வைத்துக் கொண்டார்.தமிழ் நாட்டின் முதல் கிறிஸ்தவ என்.ஜி.ஓ என அவரைச் சொல்லலாம்.அவர் கிறிஸ்தவத்தின் ஒரு முன் களப் பணியாளர்.அவருக்கு கொடுக்கப்பட்ட பணி அவ்வளவே. அவருக்கும் தமிழ் நாட்டிற்கும் ஒரு தொடர்பும் கிடையாது.தமிழ் பண்பாட்டிற்கும் அவருக்கும் சிறு தொடர்பும் அவருக்குக் கிடையாது.அவருடையது கிறிஸ்தவத்திற்கான முன் களப்பணி.

கிறிஸ்தவம் செல்லும் இடங்கள் அனைத்திலும் இத்தகைய போலிப் பெரியார்கள் உண்டு.அவர்களை அது முதலிலேயே உருவாக்கிக் கொள்ளும் .அவர்கள் அங்குள்ள பிரதான மதங்களை சிறுமை செய்வார்கள்.இழிவு படுத்துவார்கள்.இந்தியாவின் அது இந்து நிந்தனையை கையில் எடுத்தது போலவே ஜப்பானில் பௌத்த நிந்தனையை கையில் எடுத்தது.

மார்க்ஸிய தத்துவ மேதை லூயி அல்தூஸர் கூட இவர்களின் போலி பகுத்தறிவு வாதம் கிறிஸ்தவத்தின் நவீன வடிவம் என்று சொல்லியிருக்கிறார்.அவர் இந்த போலிப்பகுத்தறிவு வாதம் என்பதே கிறிஸ்தவத்தின் நவீன வடிவம் தான் என்கிறார்.நீங்கள் ஸ்டாலின் சி எஸ் ஐ கிறிஸ்தவர்களிடம் சென்று இது உங்கள் ஆட்சி என சொன்னதை இதனுடன் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ள வேண்டும்

Comments

  1. தமிழக வரலாற்றில் பாஜக இதுவரை கண்டிராத ஒரு அறிவு கெட்ட தலைவர் என்ற இடத்தை இந்த அண்ணாமலை பெற்றுள்ளார்.. இவர் உண்மையில் காவல் துறை அதிகாரியாக படித்து வந்தாரா இல்லை ஆர் எஸ் எஸ் துணையுடன் தேர்ச்சி பெற்றாரா என தெரியவில்லை

    ReplyDelete
  2. லஷ்மி உங்கள் சனாதன ஆர் எஸ் எஸ் புத்தி அப்பட்டமா தெரியுது. பிஜேபி எந்த விதத்திலே தலித் நேசிப்பு இயக்கம். இந்துத்துவா என்பதே ஜாதியால் ஆனது தானே. திருமாவளவனை பிழைப்பரசியல் என்னும் உங்கள் காவிப்பார்வைக்கு என் வன்மையானக் கண்டனங்கள்.

    பெரியார் போன்ற மாற்றுச் சிந்த்னையாளர் உங்களுக்கு சிறியரா. உங்கள் இந்துத்துவா பெண்களுக்கு என்ன சொல்கிறது

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்தை பதிவிட்டிருக்கிறீர்கள், வாழ்த்துகள்.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நீண்ட நாட்களுக்கு முன் ஏதோ ஒரு பத்திரிக்கயில் வந்த லக்ஷ்மி மணிவண்ணனில் கவிதையை படித்து அவர் யாரென்று தெரிந்துகொள்ளும் ஆசையில் இன்றுதான் 'லக்ஷ்மி மணிவண்ணன்' கவிதைகள் என்று கூக்ள் செய்து இங்கு வந்து நிற்கிறேன்.பெரிய ஏமாற்றத்தை உணர்கிறேன். எனக்கு தெரிந்த வட்டத்தில் பிஜேபி - யை ஆதரிக்கும் நபர்களின் மிக அடிப்படையான ஒற்றுமையே சாதி கட்டமைப்பை ஆதரிக்கும் மன நிலைதான். வெளிப்படையாகவோ அல்லது எளிதில் உணரக்கூடியதாகவோ இது இருக்கும்.

    கிருஷ்ணசாமி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியே கிடையாது. ஒரு மணிதன் சக மணிதனை பிறப்பின் அடிப்படையில் இழிவு செய்கிற சாதிய ஒடுக்குமுறை தவறென்ற எண்ணமெல்லாம் அவருக்கு கிடையாது. அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக அரசியல் செய்பவரல்ல, அவரது அரசியல் பள்ளர்களுக்கானது ( அதிலும் சமரசம் செய்துகொள்ளக்கூடியவர்), நாங்கள் தலித்துகள் அல்ல, நாங்களும் உயர் சாதிதான் என்பது அவரின் நிலைப்பாடு. பின் அந்த நிலையிலிருந்தும் கீழிறங்கி இன்று தன் சுய லாபத்திற்காக மட்டுமே கட்சி நடத்திக்கொண்டிருப்பவர். அவருடைய குடும்ப சொத்து மதிப்பு தெரியுமா உங்களுக்கு? திருமாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பறையர்களுக்கானது மட்டுமல்ல, அது உலகளாவியது. அவர் கி.சாமி போல் இல்லாமல் மிகுந்த சித்தாந்த தெளிவோடு அரசியல் செய்பவர்.

    பிஜேபி இந்திய அளவில் தலித் மக்களுக்கெதிரானவர்கள் என்ற பிம்பத்தை உடைத்திருந்தால் அதை அவர்களின் ஏமாற்று தந்திரத்தின் வெற்றியாக மட்டுமே பார்க்க முடியும். தலித் மக்கள் மீதான அவர்களது அக்கறை, இடையில் அவர்களுக்கேற்பட்ட அவர்களின் சித்தாந்த பின்னடைவை சரிகட்டும் ஒரு தற்காலிக சமரம் மட்டுமே. அது அவர்களின் ஏமாற்று வேலை. திமுக (ம) அதிமுக-வின் ஊழல், தலித் மற்றும் இடது சாரிகளின் இந்து மத விரோத போக்கு, எல்லாம் தவறென்று உணர்ந்துதான் இருக்கிறோம், இவையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய தீங்குகள். ஆனால் பிஜேபி-யினால் தமிழ் மொழிக்கும் சமத்துவத்திற்ம் ஏற்படவிருக்கும் ஆபத்து நிரந்தர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.

    அண்ணாமலை பிஜேபியின் ஒரு திறமையான அடியாள் மட்டுமே. அவரும் சாதி கட்டமைப்பின் அபிமானத்தால் பிஜேபியில் இணைந்தவராக் இருக்கக்கூடும். அவர் சொல்லும் அவரின் அரசியல் பிரவேசத்திற்கான காரணம் நம்பகத்தன்மை அற்றது.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணசாமி சொத்துகள் பற்றி பேசும் நீங்கள், திருமா மற்றும் சீமானின் சொத்துகள் பற்றியும் பேசுங்களேன். கிருஷ்ணசாமிக்காவது டாக்டர் தொழில் உள்ளது. இவர்களுக்கெவ்லாம் என்ன தொழில்?. ‌‌எப்படிசொத்துகள் சேர்த்தார்கள்? திராவிடியன் ஸ்டாக்குகள் மற்றும் இடதுசாரிகளால் ஏற்படும் தீங்குகள் கட்டுக்குள் கொண்டுவரக் கூடிய தீங்குளாம். ஆனால் பாஜக வால் நிரந்தர தீங்குகள் விளையுமாம். நல்ல நகைச்சுவை ஐயா. 50 ஆண்டுகளாக தமிழகத்தில் வளர்ந்தள்ள லஞ்சமும், ஊழலும் கட்டுப்படுத்தக்கூடிய தீங்குகளா?. ‌‌‌கட்டுபடுத்த ஏன் முடியவில்லை ஐயா?. ‌‌பாஜக மத்திய அரசு பொறுப்பேற்றுக் செய்த முதல் நடவடிக்கையே மத்திய அரசுப் பணிகளில் 90% லஞ்சத்தை ஒழித்தது தான் மிகப் பெரிய சாதனை. ‌‌நிர்வாகம்எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்பது கண்கூடு. ‌த மிழகத்திலும் அந்த நிலை வர பாஜகவுக்கு ஒரு வாய்ப்பளித்துதான் பார்ப்போமே. திராவிடியன் ஸ்டாக்குகளால் தமிழுக்கு நீங்கா, பாஜக வினால் தமிழுக்கு நீங்கா என்று பார்ப்பதற்கும் பேசுவதற்கும் பாஜகவுக்கு ஆள் வாய்ப்பளித்து விட்டு தானே எடை போட முடியும். கண்ணை மூடிக்கொண்டு இருட்டு என்று சொல்லக்கூடாது தானே?

      Delete
    2. கிருஷ்ணசாமியின் தனிப்பட்ட சொத்துமதிப்பு பற்றி உங்களுக்கு தெரியாது என்பது தெளிவாக தெரிகிறது. ஒருவரின் தனிப்பட்ட சொத்துமதிப்பிற்கும் அவது இயக்கத்தின் சொத்து மதிப்பிற்குமான வித்தியாசம் உங்களுக்கு புரியவில்லை. கி.சா என்ன முழு நேர டாக்டர் தொழில் செய்து பணம் சம்பாதித்தாரா? ஜோக். கருணாநிதி ஒரு புகழ் பெற்ற சினிமா கதை-வசனகர்த்தா, அதை வைத்துதான் இவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பது சொல்வதை போன்ற கருத்து இது. இந்த கட்டுரை திருமா-கிசா பற்றியது இதில் சீமானை இழுக்கவேண்டாம். எனக்கு சீமான் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளார் என்பது தெரியாது, எவ்வளவாக இருந்தாலும் அது கிருஷின் சொத்தில் நூறில் ஒரு பங்கு கூடதேறாது. பாஜக- தமிழ், தமிழர் என்ற அடையாளத்திற்கெதிரானவர் என்பதை ஏற்கனவே பல முறைப்பார்த்திருக்கிறோம். தமிழர்களுக்கும்- பாஜகவின் சித்தாந்தங்களுக்கான விரோதம் என்பது, மரபியலானது, அதன் மூல காரணங்களுக்கான வேர்களை தேடினீர்களான இரண்டாயிரம் ஆண்டுக்கும் அதிகமாக பயணிக்கவேண்டியிருக்கும். திமுக ஊழல் கட்சிதான், பாஜக மட்டுமென்ன? இந்தியாவில் ஒரே ஆண்டில் முந்தைய ஆண்டை விட 16000 மடங்கு லாபம் பார்த்த நிறுவனம் யாருடையது என்று பாருங்கள், அவர் இந்தியாவின் உச்ச அதிகாரமிக்க அமித்ஷா வின் மகன் என்பது எதேச்சையானதா? அவர் இந்த சிறிய வயதில் இந்தியாவின் அதிகாரமிக்க பிசிசிஐ-யின் செயலாரக மாறியது அதிகார துஷ் பிரயோகம் இல்லையா? பாஜக-விறகான நிதிஉதவி செய்யும் அதானியின் சொத்து பாஜக-வின் ஆட்சியில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று தெரியுமா, இதுவும் எதேச்சையானதா? க்டந்த ஆயிரம் ஆண்டுகளில், இந்தியாவில் எத்தனையோ கொடூரமான ஆட்சிகள் நடந்திருக்கலாம், மக்கள் வரிப்பணத்தை துஷ்பிரயோகம் செய்த அரசுகள் ஆயிரம் இருந்திருக்கலாம், ஆனால் இன்று அவர்கள் சந்ததியினர் யாரென்றே தெரியாமல், அடையாளம் இல்லாமல் போயிருப்பார்கள், ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாக சாதி, மத வெறுப்புகள், நாட்டின் அனைத்து மக்களையும் பாதிக்கக்கூடிய கொடுமையான காரணிகளாக இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊழல் என்ற தீங்கிற்கும், ஒரு தவறான சமூக சித்தாந்தத்தால் ஏற்படக்கூடிய தீங்கிற்குமான வித்தியாசம் இது. மீண்டும் சொல்கிறேன், பாஜக தமிழகத்தில் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ் மொழிக்கும் சமத்துவமான சமூகத்திற்ம் ஏற்படவிருக்கும் ஆபத்துகள் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தும், தமிழர்கள் விழிப்போடிருக்கவேண்டிய காலம் இது.

      Delete

Post a Comment

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"