Posts

கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன.

Image
கடற்கரை கிராமங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலேயே வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரி மாவட்டம் விடிந்தது.கடற்கரைகளில் இருந்து வர வேண்டிய பேருந்துகள் வரவில்லை.பின்னர் இடைகிராமங்கள் வரை சென்று கடற்கரைகளைத் தொட்டு விடாமல் திரும்பும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது.காவல் வளையங்கள். மீறி பேருந்துகளில் ஏறுகிற கடற்கரை மக்கள் காவலர்களால் இறக்கி விடப்படுகிறார்கள்.இது என்ன வகையான ஒடுக்குமுறை என்பதே விளங்கவில்லை.ஊடகங்கள் இதனை பொருட்படுத்தாமல் இருக்கின்றன. மணக்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சரக்கு பெட்டக துறைமுக வேலைகளுக்கு எதிராக மக்கள் இன்று; மாவட்டத்து தலைநகரான நாகர்கோயிலுக்கு சென்று மனு கொடுக்கவிருக்கிறார்கள் என்பதனை முன்னிட்டு இந்த நடவடிக்கை.கடலோர கிராமங்களை சிறை வைக்கும் நடவடிக்கை.பொய் வழக்குகள்,தனி மனிதர்களை சிறை வைத்தல் போன்ற நடவடிக்கைகளை மிஞ்சும் விதத்தில் இந்த அரசின் கடலோர கிராமங்கள் சிறை வைப்பு நடவடிக்கை .அரசின் அடக்குமுறைகள் நாள்தோறும் புதுப்புது வடிவங்களை அடைந்து வருவதற்கு சான்று இந்த நடவடிக்கை.இது அப்பட்டமான மக்கள் விரோதம் என்பதில் யாத...

உங்களைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்

Image
உங்களை ச்  சுற்றிலும் அமைதி நிலவட்டும் பாலகுமாரன் உதவி இயக்குனர்களைப் பற்றி ஏதோ  தவறுதலாகச் சொல்லிவிட்டார் என்று ; சேரன் தலைமையில் ஒரு சமயம் பாலகுமாரன் வீடு  நோக்கிப் படையெடுத்துச் சென்றார்கள்.அப்போது சேரனை நோக்கி கண்ணீரோடு இருகை கூப்பித் தொழுது மன்னிப்பு கேட்கிற அவருடைய  புகைப்படம் ஒன்று பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.அந்த புகைப்படம் என்னை அந்த நேரத்தில் மிகவும் கதிகலங்கச் செய்தது.ஒரு எழுத்தாளன் அப்படி நிற்கும் நிலையை ஒருபோதும் ஏற்படுத்தக் கூடாது .சேரனுக்கும் பின்னர் அதுபோல பொதுவில் கதிகலங்கி கண்ணீரோடு நிற்கும் சந்தர்ப்பம் வந்தது.இரண்டினையும் இந்த சந்தர்ப்பத்தில் தொடர்புபடுத்தவில்லை . ஆனால் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு  தவிர்க்க இயலவில்லை . மறைய மறுத்து...அந்த புகைப்படமும் எனது மனதில் பதிந்திருக்கிறது.எழுதுகிறவனுக்கு இது போன்ற தண்டனைகளை சமூகம் ஒருபோதும் தரக்கூடாது.அது நிச்சயமாக நல்லதல்ல என்று நினைப்பவன் நான் . அவருடைய பக்தியெழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.எந்த பிரபல இதழிலோ, சாதாரண பக்தி அல்லது ஜோதிட இதழ்களிலோ கட்டுரைகள் வெளியாகியிருந்தாலும...

ஊட்டி காவிய முகாம் மூன்று நாட்கள்

Image
ஊட்டி காவிய முகாம் மூன்று நாட்கள் "பெருவனத்திடம் விடைபெற்று திரும்புகிறேன் வனம் விட மனமின்றி காட்டுமாட்டின் ரூபத்தில் பனிப்புகை மூட்டமாய் பின்தொடர்ந்து வருகிறது சிறுபொட்டாய் எனை எடுத்து அதற்கொரு திலகமிட்டேன் நாளைய புலரி திலகமிட்ட வண்ணம் உதிக்கும் இவ்வனத்தில் வனம் முளைக்கும் என் முற்றத்தில் திலகமும் வனமும் இருவேறிடங்களில் இருந்தாலும் " விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கழிந்த மூன்று தினங்களில் ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த காவிய முகாமில் முழுமையாகப் பங்கேற்றேன்.இப்போது நடைபெறுவது 25 ஆவது முகாம் என்று சொன்னார்கள்.சில காலங்களுக்கு முன்பிருந்தே பங்கேற்றிருக்கலாம் என்கிற எண்ணம்; இப்போது கலந்து கொண்ட போது தோன்றியது.அவ்வளவிற்குச் சிறப்பு. எவ்வளவோ காலங்களை வீண் விரயம் செய்திருக்கிறேன்.செய்திருக்க வேண்டியவற்றைச் செய்யவில்லை.இனியேனும் சில காரியங்களை செய்ய வேண்டும் என்கிற தூண்டுதலை இந்த முகாம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.இந்த உளத் தூண்டுதல் எனக்கு மிகவும் முக்கியமானது. ஒரு மிகப் பெரிய படைப்பாளியின் இருப்பு எப்போதும் இலக்கிய இயக்கங்களுக்கு ;அது தனது சாரத்தில் தகுதி கொள...

ஊழில் விலகுதல்

Image
ஊழில் விலகுதல்  அத்தனைக்கு எளிமையான காரியமில்லை அது.கடுமையான பிரயத்தனம் உள்ளும் புறமும் இருந்தால் சாத்தியமாகும் காரியம் இது. இருவேறு மனிதர்களாக நாம் இருக்கிறோம் எண்ணம் செயல்கள் வழியே ஊழைப் பின் தொடர்வோராக மட்டுமே இருப்பவர்கள் முதல் வகை.பெரும்பாலும் இவர்களே அதிகம்.எங்கு கொண்டு விட்டாலும் திரும்பி நினைவின் திண்ணையில் வந்து படுத்திருக்கும் நாயைப் போல இவர்கள் ஊழில் புரள்வோர். ஊழில் மட்டுமே புரண்டு கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதவர்கள் இவர்கள். ஊழில் விலகத் தெரிந்தவன் தன்னைச் சு ற்றி அனைத்தையும் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறான். யோகம் ஒரு வழிமுறை.படைப்பு மற்றொரு வழிமுறை . குப்பைகளை விலக்குவதற்கு இவையிரண்டும் கற்றுத் தருவதால் இவை ஊழை விலக்குவதற்கும் உதவுகின்றன. பிறவழிகள் இருக்கலாம் எனக்குத் தெரியவில்லை.பின்னாட்களில் உங்களுக்கு உபயோகப்படுவேன் என்கிற பாவனையோடே குப்பைகள் நம்மைப் பற்றிப் பிணிக்கின்றன.உண்மையில் தற்போது உதவாத எதுவுமே பின்னாட்களில் உதவாது .குப்பை இந்த பண்பு கொண்டு நம்மைப் பிணித்து ஊழில் கொண்டிணைக்கிறது. ஊழில் நம்மைப் பற்றி பிணைக்கும் இரண்டு மிருகங...

கோடைகாலக் கவிதைகள்

Image
எட்டு மரப்பலகைகள் கொண்ட கடை நீலவேணி அக்காவுடையது வெற்றிலை பாக்கு ,சர்பத் ,தேன்குழல் மிட்டாய்கள் குளிர்ந்த பானை மோர் சுற்றுப் பீடிகள் சுருட்டு வெம்மை சாலை சிறுக சிறுக உயர்ந்ததில் திண்ணை இரண்டடி பள்ளத்தில் மாட்டிக் கொண்டது நீலவேணி அக்கா பாதி உயரத்தில் நின்று தெரிகிறாள் அவள் காலடிகள் மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய காலத்தில் புதையுண்டிருக்கிறது கடைக்குள் உள்ள காலம் வெளியில் இல்லை வெளியில் உள்ள காலத்தை உள்ளே அனுப்ப வழிகள் ஏதுமில்லை நீலவேணி அக்காவாக இருக்கும் போது அந்த கடைக்குள் நுழைந்தாள் அவள் முழு உயரம் அறிந்திருந்த காலம் அது இந்த பக்கம் இருந்தால் அந்த பக்கத்திற்குள் நுழைய முடியாது அந்தப் பக்கமிருந்தாலோ இந்த பக்கத்திற்கு வாசல்கள் இல்லை இருவேறு காலங்களுக்கு மத்தியில் வெறுமனே எட்டு பலகைகள் 2 இருபது வருடங்களுக்குப் பிறகு நண்பனை சந்தித்தேன் ஹலோ என்றேன் ஹலோ என்றான் அடையாளம் தெரியாமல் நகர்ந்தான் அடையாளம் தெரியாமல் நகர்வது எவ்வளவு சுகமாயிருக்கிறது ? நகர்ந்தவன் பின் திரும்பி உங்கள் குரலை எங்கோ கேட்டிருக்கிறேன் என்றான் உலகில் ஏழுபேரின் குரல்...

அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள்

Image
அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள் அதிகமாக புத்தகங்களை படிக்காதீர்கள்.அதிகமாக உண்ணும் உணவும் , அதிகமான புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் ஜீரணமாவதில்லை.புத்தக வாசிப்பு இயல்பானதாக இருக்க வேண்டும்.உங்களை ஒரு புத்தகம் தேடிக் கொண்டிருக்கும்.அந்த புத்தகத்தை நீங்கள் சென்று சேர வேண்டும்.புத்தகங்களில் வியப்புணர்ச்சி கொள்பவர்கள் மிக விரைவாகவே வாசிக்கும் பழக்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள்.காரியத்திற்காக வாசிக்கிறவர்களும் வெளியேறுவர்.புத்தகப் பழக்கமே இல்லாத ஜீவராசிகளை எழுச்சி கொள்ளச் செய்வதற்காகவும் நான் இதனைச் சொல்லவில்லை. அதிகம் புத்தகம் படிப்பதால் அறிவு வளர்ந்து விடும் என்பது தலை சிறந்த மூட நம்பிக்கைகளுள் ஒன்று.அதிகமாக சிறந்த சினிமா பார்ப்பவர்கள் சிறந்த திரைப்படங்களை எடுத்து விடுவார்கள் என்பதனைப் போன்ற மூட நம்பிக்கை இது.இது உண்மையானால் திரையரங்குகளில் படங்களை ப்ராஜெக்ட் செய்பவர்கள் எவ்வளவு திரைப்படங்களை தந்திருக்க வேண்டும் ? உங்களுக்குள் இல்லாத ஒன்றை புத்தகங்கள் ஒருபோதும் தருவதில்லை.மொழி வடிவமற்ற நிலையில் உங்களுக்குள் உள்ளடக்கம் ஏற்கனவே இருக்குமேயாயின் புத்தகம் அதனை உயிர்ப்பிக்கும். ...

தமிழில் முன்னுதாரணமற்ற படைப்பாளி ஜெயமோகன்

Image
தமிழில் முன்னுதாரணமற்ற படைப்பாளி ஜெயமோகன் நவீனத்துவத்தின் எல்லைகளை ராட்சஷ பலத்துடன்  அவர் கடந்து சென்றிருக்கிறார்.இது ஒரு விஷேச நிகழ்வு . அதற்குரிய பாதைகள் ஏற்கனவே இங்கு அமைக்கப்பட்டிருக்கவில்லை.சில தெறிப்புகள் மட்டுமே இருந்தன.தானாகவே அவர் அப்பாதைகளை உருவாக்கிய வண்ணம் படைப்பு வெளியை அதிகப்படுத்தியிருக்கிறார்.இதனை வெறி கொண்ட சாகசத்தால் சமைத்திருக்கிறார்.வரும் தலைமுறை படைப்பாளி அதனை வெட்டியோ,ஒட்டியோ அதில் கடக்க முடியும் .அவருடைய கண்ணோட்டங்களை ஏற்று வெட்டியோ ஒட்டியோ பயணிக்க அவனுக்கும் வெறி கொண்ட பலம் தேவை.எளிய இலக்கிய காரியங்களை அவருடைய இயக்கமும் எழுத்தும் புறக்கணிக்கின்றன.படைப்பாளி மிக பெரிய கனவுகளைக்  காண்பவனாக உருக்கொள்வதற்கான அரிய முன்னோட்டம் இது.உண்மை அடையும் படைப்பு ரூபம்  .இதனை எய்த வெளிப்படைத்தன்மையும் திறந்த அகமும் அவருக்கு பேருதவி செய்திருக்கின்றன. அவருடைய பிறந்த நாளான இன்று அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரும் குழந்தைகளும் ,வாழ்க்கைத் துணையும் உடல் நலம் , நீள் ஆயுள் ,நிறை செல்வம் ,உயர் புகழ் ,மெஞ்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்க வளமுடன்...