இந்தியாவில் நடைபெறும் கமிஷன் அரசியல் ஆபத்தானது

இந்தியாவில் நடைபெறும் கமிஷன் அரசியல் ஆபத்தானது


இந்தியா நவீன ஜமீன்களை உருவாக்குமிடத்திற்கு மெல்ல மெல்ல நகர்ந்து ; இப்போது வேகமாக அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.அதற்கான தத்துவார்த்த ,அழகியல் ,கலாச்சார பின்னணிகள் எல்லாமே ஏற்கனவே உருவாகிவிட்டன.பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் இந்தியாவில் நவ ஜமீன்களை கருத்திற் கொண்டே செயல்படுகின்றன.இது சரியா தவறா என்றெல்லாம் எனக்கு சொல்லத் தெரியாது,ஆனால் ஒரு விஷயத்தை இதனை முன்னிட்டு சொல்ல முடியும் . நினைவுபடுத்தவும் முடியும்.
அது ஏற்கனவே நாம் கடந்து வந்த பாதை . எதிர்காலத்தில் நவ ஜமீன்கள் அந்தந்த பகுதிக்கான நலவாழ்வுப் பணிகளை மேற்கொள்கிறவர்களாக உருமாறவிருக்கிறார்கள்.அதுவும் ஏற்கனவே ஜமீன்கள் செய்து வந்த காரியமே .புதிதில்லை.
இரண்டு விதமான காரியங்களில் இருந்து இந்தியாவை விடுவிக்க முடியவில்லையெனில் நமது முன்னோர்களின் கனவுகளும் தியாகமும் தரைமட்டமாகப் போவது உறுதி.முதலாவதாக இப்போது நடைபெறுகிற கமிஷன் அரசியல் முடிவிற்கு வந்தே ஆகவேண்டும்.இல்லையெனில் இப்போதைய அரசியல் கதாபாத்திரங்களோடுதான் நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.அது வெட்டியானதொரு வேலை.இன்று இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கமிஷன் அரசியலை மையம் கொண்டே நடைபெறுகின்றன.அது ஏதோ தவிர்க்கவேயியலாத ஒரு நடைமுறை போல படிந்து விட்டது.பல நவ ஜமீன்கள் இணைந்து இந்த அரசை, கமிஷன் அரசை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.பல்வேறு சொல்லாடல்கள் வழியே மக்களிடம் இந்த முகம்
மறைக்கப்படுகிறது. வளர்ச்சியே கடவுள் என்னும் முகமூடி இந்த கமிஷன் அரசியலின் முக்கிய அங்கம்
நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் கமிஷன் நாற்பது சதமானம் என்கிறார்கள்.இப்படி தொலைத்தொடர்பு , அணுசக்தி,சுகாதாரத் துறை என கமிஷன் மண்டிக் கிடைக்கும் துறைகள் நிறைய .இவையே அரசியலுக்கு மூலதனம்.கமிஷன் அதிகமாகத் தேறுகிற திட்டங்கள் அனைத்திலுமே வளர்ச்சி என்னும் கோஷம் மூலம் முன்வைக்கப்படுகின்றன என்பதே எதார்த்தம்.
மற்றொன்று அரசியல் கதாபாத்திரங்கள் அனைத்துமே பெருவணிக பின்புலங்களில்
மட்டுமே , அவற்றில் தயவில் மட்டுமே வடிவம் பெற்று நம்மை வந்து சேருகின்றன.பிற தரப்புகளுக்கு முற்றிலுமாக அரசியல் பங்கேற்பு மறுக்கப்படுகிறது அல்லது இல்லை என்று சொல்லலாம்.நிலவுடமை அரசுகளில் விவசாயம் மட்டுமே மைய கதாபாத்திரம் எனில் ,தற்போதைய அரசுகளில் கமிஷன் நிறுவனங்கள் மட்டுமே மையம்.இந்த கமிஷன் அரசுகளை ஏற்றுக் கொள்வோமெனில் முற்றிலுமாக அதிகாரம் மையமானதொரு பொருளாகி நிலவுடைமையை காட்டிலும் அபாயகரமான ஒரு ஏகோபித்த அரசை உண்டாக்கி விடுவோம்.இப்போதே நிலவுடமையெல்லாம் ஒரு அபாயமா ? என்று தோன்றுகிற லட்சணத்தில் தான் காரியங்கள் நடக்கின்றன.
நான் எப்போதும் ஏழைகளுக்கு ஆதரவான , அவர்களின் பங்களிப்பு கொண்ட அரசையே கருத்தில் கொள்கிறேன்.அவர்களுக்கு நவ ஜமீன்கள் வந்து உதவுவார்கள் என்கிற ஒற்றைப்படையான அதிகார அரசு அமைப்புகளை விரும்பவில்லை.இன்றிருந்திருந்திருந்தால் காந்தியும் இவ்வாறுதான் சிந்தித்திருப்பார்.அனைவருடைய பங்களிப்பும் பங்கேற்பும் இருப்பதற்குப் பெயரே ஜனநாயகம் .
நாம் இப்போது தவறி வேறு பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் .தவறும் பாதைக்கு ஆயிரம் தர்க்கங்கள்,விவாதங்கள் .இது மிகவும் பரிதாபத்திற்குரிய நிலை

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"