கேரளா மீதான இந்தியா அரசின் வஞ்சம்

கேரளா மீதான இந்தியா அரசின் வஞ்சம்

உதவிகள் வேண்டுவோருக்கு செய்ய இயலாமற் போவதில் ஒன்றுமில்லை.ஆனால் ஒருவர் உதவி செய்ய முன்வரும் போது ; அதனைக் காரணம் காட்டி ,கோள் மூட்டித் தடுப்பது மகா பாவம் என்கிறது குறள்.கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த உதவியை இந்திய அரசு முன்னுதாரணம் காட்டி மறுத்திருப்பது ஒரு ஈனத்தனமான செயல்  .தீயன செய்வதற்கு எதையும் பின்பற்ற வேண்டியதில்லை என நினைக்கும் இவர்கள்;நல்லன செய்வதற்கு முன்னுதாரணங்கள் சொல்வது கேடு நிறைந்த வஞ்சம் அன்றி வேறில்லை.

உலகெங்கும் பரவியிருக்கும் இந்திய மக்களில் தமிழர்களை போன்றே மலையாளிகளும் உலகில் பல பகுதிகளில் தங்கள் அரும்பெரும் பங்களிப்புகளை செய்திருக்கிறார்கள்.ஐக்கிய அரபு அமீரகம் அந்த நன்றிக் கடன் சம்பந்தப்பட்டே இக்கட்டான இந்த வேளையில் நிவாரண உதவி அறிவித்திருக்கிறார்கள்.இந்த உதவி அறிவிப்பு வெளியான முதற் கொண்டு இழிவுபடுத்தும் பேச்சுக்கள் உருவாக்கப்பட்டன.பின்னர் இப்போது அந்த உதவியை இந்தியா ஈனத்தனமான காரணங்களை முன்வைத்து மறுத்திருப்பது பிற நாட்டு நல்லிணக்கத்தில் மோசமான நிலையை ,பாரபட்சத்தை தற்போதைய காவி இந்தியா பின்பற்றுகிறது என்பதற்கு சாட்சியாகக் கொள்ளலாம்.

பேரிடர்களில் மனித துயரங்களில் இனம் ,மொழி ,மத ,சாதி ,நாடு இன்னபிற வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதும் ,கரம் நீட்டி காக்க முன்வருவதும் மனிதகுலம் பல நுற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருகிற போற்றுதலுக்குரிய குணம் .இந்தியா அரசு இப்போது கடைபிடிக்கும் முறை கேரளாவிற்கு செய்கிற வஞ்சகம் மட்டுமல்ல,மனித குலத்தின் நற்பண்புகளுக்கு விடப்பட்டிருக்கும் சவால்.

ராமனின் பெயர் சொல்லி ஒரு ராவண கூட்டம் தங்கள் அதிகாரத்தை இந்தியா முழுமைக்கும் இன்று ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள்.ராம நாமம் சொல்லியே இந்த ராவணர்களை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.தர்மம் நிலைநாட்டப்பட வேறு வழிகள் கிடையாது.இவர்கள் மனித குலத்தின் நற் பண்புகள் அனைத்தையுமே சிதைத்து விடுவார்கள்.

உயிரிழப்புகள் ,வீடுகளை இழந்தவர்கள்,தொழில்களை இழந்தோர் ஆகியோருக்கு யோசித்துப் பாருங்கள் ; இந்த உதவி ஏதேனும் ஒரு விதத்தில் உறுதுணையாக இருந்திருக்கும்.

செய்திருப்பது வஞ்சம்.தானும் செய்ய மாட்டேன் ; பிறரையும் செய்ய விடமாட்டேன்.நல்ல பாலிசி 

Comments

Popular posts from this blog

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"