முஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை

முஸ்லீம்கள் தான் பிறருக்கு இடம் தருவதில்லை முஸ்லீம்கள் கூட்டாக சேர்ந்து வாழும் பகுதிகளில் பிறருக்கு வீடு கொடுப்பதில்லை என்பதே உண்மை.இந்துக்களுக்கு என்றில்லை .அது போன்று கூட்டாகவும் தன்னிறைவோடும் வாழும் பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கும் அவர்கள் வீடு தர மாட்டார்கள். இதனைக் குறையாகச் சொல்லவில்லை.பொருளாதாரத் தன்னிறைவு பெற்று ,குழுவாக வாழுகிற பல சமூகங்கள் பிறரை அனுமதிப்பதில்லை .இல்லையெனில் அனுமதிப்பதில் சுணக்கம் கடை பிடிப்பார்கள்.இதன் காரணங்களும் எளிமையானவை அல்ல.முஸ்லீம்கள் கூட்டாக இணைந்து வாழுகிற பகுதிகளில் பிறர் வாடகைக்கு அமர்த்த பட்டிருக்கிறார்களா ? நினைவைத் திரட்டி யோசித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.நடைமுறை தெரியும் .திருவல்லிகேணியிலிருந்து ,மேட்டுப் பாளையம் ,இடலாக்குடி என எங்கு வேண்டுமாயினும் நீங்கள் சுற்றியலைந்தும் பார்க்கலாம்.நடைமுறை உண்மையல்லாத சில சுயவெறுப்புக் கருத்துக்கள் பேரில் இங்கிருப்போரின் கவர்ச்சியை மையமிட்ட கழிவிரக்கக் கசடுகள் பொத்தாம் பொதுவாக உண்மைக்கு எதிராகப் பேசுகின்றன.இந்த கழிவிரக்கக் கசடுகள் பேசுவதில் , உண்மை நிலவரம் மறைக்கப்பட்டு பொது விரு...