கைது செய் சுப்பிரமணியன் சாமியை

கைது செய் சுப்பிரமணியன்  சாமியை





தொடர்ந்து தமிழர்களையும் பொறுக்கிகள் என்றும்  தமிழ் மக்களின் போராட்டங்களை பொறுக்கிகளின் போராட்டம் எனவும் பா.ஜ .க முத்த தலைவர் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி கூறிவருகிறார்.ஒரு மாநிலத்தின் மக்கள் அனைவரையும் பொறுக்கிகள் என கூறுவதும் உத்தேசிப்பதும் எத்தகைய இழிவான ஒரு மன நிலை ? இனவெறுப்பின் அடிப்படையில் சொல்லப்படுகிற இந்த கூற்று தமிழ்நாட்டில் உள்ள சில செலீப்பர் செல்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கமூட்டுவதாக உள்ளது.சுப்பிரமணியன் சுவாமியின்  சொல்லும் செயலும் தேசிய இணக்கத்திற்கு பெரும் இடையூறையும் ஒருமைப்பாட்டுணர்ச்சிக்கு பங்கத்தையும் ஏற்படுத்தக் கூடியவை.இது இந்திய தேசத்திற்கு எதிரான ஒரு செயல்.பா.ஜ .க இது குறித்து தனது விளக்கத்தைத் தரவேண்டும்.ஒருவேளை பா.ஜ .க இவ்விஷயத்தில் விறுதே  இருக்குமெனில் அவர்களுடைய தமிழர்களைப் பார்வையும் இதுதான் என்று எடுத்துக் கொள்ளலாமா ? என்ன நினைக்கிறார்கள் ? .இது போன்றே மராத்தியர்கள் பொறுக்கிகள் ,கன்னடர்கள் பொறுக்கிகள் என்று பிற தரப்புகளும் பேசத் தொடங்கினால் அது எப்படி இருக்கும் ? அசிங்கமாக இராதா ? தொடர்ந்து இவர் இப்படி  பேசி வருவது இன வெறுப்பை மட்டுமே அடிப்டையாகக் கொண்டது.வழக்கு போட்டுக்குப் பார்க்கட்டும் இந்த பொறுக்கிகள் என்று சவாலும் விடுகிறார். தேச நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பது.தேசத்திற்கு எதிரான இன விரோத வழக்குகளில் இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு இவர் இனியும்  தமிழ்நாட்டு   மக்களை  பேசி வந்தால் எழுத்தாளர்கள் ,கவிஞர்கள்,கலைஞர்கள்,அறிவாளர்கள்,பத்திரிக்கையாளர்கள்,சினிமா மற்றும் நாடகக் கலைஞர்கள்  ,தமிழ் ஆன்மீகவாதிகள்  இணைந்து  தமிழ்நாட்டில் பா.ஜ.காவிற்கும் ,சுப்ரமணிய சாமிக்கும் எதிராக கண்டனங்களைத் தெரிவித்தும் கைது செய்யக் கோரியும்  போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மக்கள் அனைவரையும் பொறுக்கிகள் என தொடந்து கூறிவரும்  சுப்ரமணிய சாமி கைது செய்யப்பட வேண்டும்.

ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கைக்கு கடற்படையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையிலும்   அவர் தனது தமிழின வெறுப்பையும் ,காழ்புணர்ச்சியையும் வெளிப்படுத்தியிருப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கும்  ,இறையாண்மைக்கும்  ,இணக்கத்திற்கும்  எதிரானது.

'தமிழகத்தில் உள்ள பொறுக்கிகள் அனைவரும் சாக்கடைக்குள் ஒளிந்து கொள்வதற்குப்   பதிலாக ,கட்டுமரத்தில் சென்று இலங்கைக்கு கடற்படையுடன் சண்டையிடுங்கள் " என்று சுப்பிரமணியன்  சுவாமி டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். அவருக்கு எத்தகைய   மனநலக் குறைபாடு வேண்டுமாயினும் இருந்து விட்டுப் போகட்டும்.அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை.பொது மனிதனாக ,இந்தியாவின் உயரிய நாட்டாமை போல அவருக்கு ஒரு முகம் உள்ளது.பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.இத்தகைய பட்டவர்த்தனமாக இன வெறுப்புள்ள மனிதரை சகித்துக் கொள்வதற்கு ஏதேனும் காரணங்கள் உண்டா என்பதை பா.ஜ.க விளக்கவேண்டும். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் ?

வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் தமிழ்நாடு தொந்தரவான மாநிலம் தமிழ்நாட்டு மக்களும் தொந்தரவானவர்கள் என்பது போன்ற பிம்பம் தேசியக் கட்சிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.கட்டமைக்கப் படுகிறது.இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அமைதிப்படை என்கிற நுத பெயரில்  சென்ற  ராணுவம் ,இலங்கைத் தமிழர்களை சித்திரவதை செய்யும் போது மதராஸி வாலாக்கள் என திட்டியதாக புத்தகங்களில் படித்திருக்கிறேன்.சுப்ரமணியன் சுவாமியின் மனோபாவத்தைக் கவனிக்கிற போது அது உண்மையாக இருக்க வாய்ப்புண்டோ என்று தோன்றுகிறது.அணுவுலைகளுக்கெதிரான இடிந்தகரை மக்களின் போராட்டத்தின் போதும் பிரியாணிப்பொட்டலத்திற்கும் ,குவாட்டருக்கும் அலைகிற கூட்டம் இது என்று சொன்னவர் இவர்.

நீண்ட வரலாறும் ,பாரம்பரியமும் கொண்ட  தமிழ்நாடு ,ஆந்திரம்,மேற்கு வங்கம்  போன்ற மாநிலங்களில் ,தேசிய இனங்களில் இரண்டு விதமான அடையாளங்கள் இருப்பது தவிர்க்க இயலாதது.அதில் ஒன்று இந்தியன் என்கிற அடையாளமாகவும் மற்றொன்று மாநில அடையாளமாகவும் இருக்கும்.அதுவே இயல்பானது.  இந்தியாவில் வாழும் தமிழனுக்கும் அது போன்றே தமிழன் என்ற அடையாளமும்  உண்டு.அதனை அவனிடமிருந்து பிரித்தெடுக்க இயலாதது.இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரமும் ,மொழியும் ,இனமும் இணைந்த தொகுப்பு.இங்கே வேறுபாடுதான் ஆகச் சிறந்த அழகே .சுப்பிரமணியசாமி போன்ற இன வெறுப்பாளர்கள் இந்த அழகிற்கு இடையூறாக முன் நின்று கொண்டிருக்கிறார்கள்.

மன்னிப்புக் கேள்
விளக்கமளி

கைது செய் சுப்ரமணிய சாமியை 

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"