நிழற்தாங்கலுக்கு திவ்யாவின் "கக்கூஸ்" ஆவணப்படம் திரையிடலுக்கு வந்துசேருங்கள்

அய்யா வைகுண்டசாமி அவதார தின விழா நல்வாழ்த்துக்கள்
நிழற்தாங்கலுக்கு திவ்யாவின்  "கக்கூஸ்" திரையிடலுக்கு வந்துசேருங்கள்

இடம் - நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி
பறக்கை ,நாகர்கோயில்
தொடர்பு எண் - 9362682373


திரைப்பட இயக்குனர் ,நடிகர்,எழுத்தாளர் அஜயன்பாலா திரையிடலைத் தொடங்கி வைக்கிறார்.
எழுத்தாளர் கோணங்கி கலந்து கொள்கிறார்
4 -3 -2017 சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு


மாசி 20 அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தில் ...நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியில்   திவ்யாவின்  "கக்கூஸ்"   ஆவணப்படம் திரையிடல் காரியார்த்தம் நிரம்பியதொரு செயல் என்பது எனது எண்ணம்.அய்யாவின் எண்ணத்திற்குகந்த செயல் இது.

திவ்யாவின் இந்த ஆவணப்படம் மலக்குழி சாவுகளை பற்றியது.இன்னும் நாம் மலக்குழி சாவுகள் நிகழும் இடத்தில்தான் குற்றபோதும் ஏதுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது சுயநலத்தின் ஈனத்தனம்.பொறுப்பில் நம்மையும் இணைத்துக் கொள்ளுதலே இந்த திரையிடல்.

அய்யா வைகுண்டசாமி தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்றவர்.மற்றபடி அன்பிலும் அடங்கேன்,சாஸ்திரத்திலும் அடங்கேன்,செய்த தவத்திலும் அடங்கேன்,கும்பிடிலும் அடங்கேன் என்றவர்.தாழக்கிடப்பாரை தற்காப்பது மட்டுமே சுய தற்காப்பு என்பதே அவர் எண்ணம்.சக்கிலியன் , சாணான் , பறையன்,மறவன், தோல்வணிகன்,கம்மாளன் ,ஈழன் ,புலையன் என சாதி பதினெட்டும் ஒக்க ஒருஇனம்போல வாழும் கனவைப்  பரிந்துரைத்தவர் அவர்.

"சாதி பதினெட்டையும் தலையாட்டிக் பேய்களையும்
வரி மலையதிலும் வன்னியிலும் தள்ளிவிடு
இன்று முதல் யானிருக்கும் தலங்களிலே சாதியெல்லாம்
ஒன்றுபோல ஒத்துமிக்க வாழுமென்றார் " இது அகிலதிரட்டம்மானையில் வருகிற கூற்று.

இந்த அவதார தினத்தில் கக்கூஸ் திரையிடுவதன் மூலமாக அவர் எண்ணத்தின் ஒருபடி மேலேறிச் செல்கிறோம்.

அனைவரும் வருகை தாருங்கள் .திரையிடல் பற்றிய தகவலை நண்பர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"