உடலின் மீது பிரபஞ்சம் திறக்கும்

அனைவருக்கும் பெருமாளின் அருள் சித்திக்கட்டும்
லௌகீகம் மனக்கரவை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.மனக் கரவகன்றால் உடல் திறக்கும்.பெருமாள் உடல் திறந்து விஸ்வரூபம் கொள்வார்.மனக்கரவும் ,எரிச்சலையும் அகற்றுந்தோறும் லௌகீகத்தில் இருந்த வண்ணமே பெருமாளைக் காண முடியும்.காணமுடியாது என்பதெல்லாம் பசப்பு.சச்ரூபமாகக் காண முடியும்.
உடலின் மீது பிரபஞ்சம் திறக்கும் இடத்திலிருந்து பெருமாள் புலப்படத் தொடங்குவார்.அது நிச்சயமாக பேரனுபவம்.எப்போதேனும் ஓரிருமுறை சித்தித்தாலும் நன்மையே .ஒரு நட்சத்திரத்துடன் ஒரு மலர் கொள்ளும் உறவைப் போன்றது அது.
வெறுப்பில் நின்று சிதறி வருவதால் ஒருபோதும் பெருமாள் தென்படமாட்டார்.பெருமாள் என்றால் பெருமாள் என்றில்லை,அல்லாவும் அவர்தான்.கர்த்தரும் அவர்தான்.சிவ சித்தியும் அவர்தான்.
உடலைத் திறக்கச் செய்யாத தியானத்திலும் பொருள் இல்லை.பக்தியிலும் பொருள் இல்லை.உடல் திறக்காத பக்தியும் ,தியானமும் மளிகைக் கடையில் பொருள் வாங்கச் செல்வதைப் போன்றது.அது எதையும் தராது.வெறுப்பில் அகல அகல மட்டுமே சித்தி கிட்டும்.
தியானம் அதை நோக்கிச் செல்லும் ஒரு பாவனை மட்டுமே.பக்தியும் அப்படித்தான் ஒரு பாவனை .தியானத்தில் கிட்டுவதாக பாவிக்கும் போது கற்பனை செய்பவை சதா நின்று உடலில் நிலைப்பதே சித்தி.உடல் ஒரு அற்புதமான கருவி.உடலென்பது ராவணன்.பத்து தலையும் பெரும் நுட்பம்.இசைக்கோலம்.நரம்பே பிரபஞ்சப் பேருணர்வு.சித்தி உடலை பிரபஞ்சத்தில் இணைப்பது.அனுபவம்.
கரவு,வெறுப்பு,சாதி,மத துவேஷங்கள்,மேல் கீழ் பாராட்டுதல்,தன்னிரக்கம் அகலாமல் சித்தியில்லை.இவற்றைக் கொண்டு நடப்போர் சித்தி பெறல் நடக்காது.மனத்தடங்கல் முற்றுப்புள்ளி . மனத்தடை பெருங்கரவு.மனத்தடை அகல சித்திக்கும் கவிச்சித்தி சித்திகட்டும்
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
[இடம் -மதுசூதன பெருமாள் கோயில் பறக்கை. ]

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்