கோணங்கியின் வீடு

கோணங்கியின் வீடு

கலையையும் இலக்கியத்தையும் எப்போதும் அரவணைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது கோணங்கியின் வீடு  .தமிழ் செல்வன்,முருகபூபதி உட்பட எல்லோருக்குமே பொதுவான பண்புகள் உண்டு.அனாதை என்று சமூகம் கைவிடுகிற எவரையும் அரவணைத்துக் கொள்கிற வீடு இது.கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழ் கலை இலக்கியத்தை மேம்படுத்தும் காரியங்களில் இந்த வீடு சதா தொடர்பு கொண்டியங்குவது.எழுத்தாளர்களில் கலைஞர்களில் இந்த வீட்டோடு தொடர்பற்றவர்கள் இருக்க மாட்டார்கள்.அல்லது மிகக்  குறைவாக இருக்கக் கூடும் ,ஒரு கை எண்ணிக்கையில் அளந்து விடும் அளவிற்கு சொற்பமாக .

கோணங்கியின் அப்பா சண்முகம் அவர்களின் "இப்படியும் சில மனிதர்கள் " நினைவலைகள் வெளியீடு சிறிய அளவில் குடும்ப விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் கூட தமிழ்நாட்டின் படைப்பாளிகள் ஏராளமானவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

மகிழ்வையும் குதூகலத்தையும் ஏற்படுத்தியது இந்த நிகழ்வு.

No comments:

Post a Comment

போலிச் சாமியாட்டங்கள்

போலிச்  சாமியாட்டங்கள் நடிகர்கள் தமிழ் நாட்டில் தொடர்ந்து அரசியலுக்கு முயற்சி செய்வதை பார்க்கும் போது ,தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்ச...