கவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.

 கவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.
திருநெல்வேலியில் பணியாற்றுகின்ற காவல் துறை நண்பர்களோ...
பத்திரப்பதிவுத் துறை நண்பர்களோ ...கவிஞர் கைலாஷ் சிவனுக்கு உதவுங்கள்.
கைலாஷ் பற்றிய நிறைய பதிவுகளை எனது முகநூலில் பலமுறை பதிவு செய்திருக்கிறேன்.தமிழின் சிறந்த கவிகளுள் ஒருவர்.நாடோடி.
சிலேட் இதழ் அவரைக் கௌரவப்படுத்தும் விதமாக "பரிவட்டம் "கட்டியது. அவர் இப்போது ஒரு இக்கட்டில் சிக்கியுள்ளார்.இந்த இக்கட்டில் இருந்து அவரை மீட்கும் வழியறிந்த நண்பர்கள் அவருக்கு உதவி செய்யுங்கள்.
அவருக்கென இருந்தது ஒரு வீட்டடியும் வீடும் மாத்திரமே.அதுவும் அவருடையதல்ல.அவர்களின் பூர்வீக சொத்து அது.யாரோ சிலர் அதனை பொய்யான ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்திருக்கிறார்கள். இப்போது வீடும் பறிபோக தெருவில் நிற்கிறார்.
நான்கு மாதங்களாக நடவடிக்கைகளுக்கு சில முயற்சிகள் எடுத்துப் பார்த்தும் , எதிராளியோ செல்லும் அலுவலகங்கள் தோறும் பணத்தால் சாதித்துக் கொண்டு வருகிறான்.அவர் இருந்த கங்கை கொண்டான் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் இருந்து கொண்டிருக்கிறார்.இந்த சிக்கலை தீர்க்க , உதவும் வழி தெரிந்த ,நண்பர்கள் அவருக்கு உதவி செய்யுங்கள். அவரிடம் கையில் பணம் எதுவுமே கிடையாது.
நெல்லையப்பனுக்கும் ,காந்திமதியம்மாளுக்கும் செய்கிற பரிகாரமாக இதை எண்ணி மனமுவந்து இக்காரியத்தை செய்து கொடுங்கள் .உங்களுக்கு அவர்களின் ஆசி உண்டாகட்டும்.
கைலாஷ் சிவனின் தொலைபேசி எண் - 9487059359

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...