புறக்கணிக்கப்பட்டோருக்கான உறைவிடம் "நிழற்தாங்கல்"

நிழற்தாங்கல்

சமூகத்தாலும் குடும்பத்தாலும் நிறுவனங்களாலும்  கைவிடப்பட்ட  கவிகள் ,எழுத்தாளர்கள் தங்கியிருக்கவும் எழுதவும் உகந்தவகையில் "நிழற்தாங்கல் "என்னும் பெயரில் ஒரு உறைவிடத்தை நாகர்கோவிலில்  ஏற்படுத்தும் காரியத்தில் "சிலேட்" இதழும் "படிகம்" இதழும் இணைந்து முயற்சியெடுத்து வருகிறது.புறக்கணிக்கப்பட்டோரின்  செயல்பாடுகளுக்கான களமாகவும் இது அமையும்.

முதலில் இதற்கென ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்து கூடிய விரைவிலேயே இதனை சாத்தியப்படுத்துவது என முயன்று வருகிறோம். நிறுவன அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு இயங்கும்  : போக்கிடம் அற்ற கவிக்கும் எழுத்தாளனுக்கும் இது உறைவிடமாக அமையும் .நூலகம்,செயல்பாட்டிற்கான வசதிகள் , திரையிடல்களுக்கான வசதிகள் ஆகியவற்றுடன் இது மெல்ல மெல்ல மேம்படுத்தப்படுதல் வேண்டும் என்பது எங்கள் துணிபு.இதுவொரு இயக்கம் . தனிநபர்களுக்கானதல்ல.தற்போதைய நிர்வாகப் பொறுப்பு மட்டுமே என்னிடத்தில் இருக்கும்.நிச்சயமாக இது ஒரு என்.ஜி.ஓ அல்ல.கூட்டான ஒரு செயல்."நிழற்தாங்கல்" உறைவிடத்தை ஒரு அறக்கட்டளையாக உருவாக்கித்தான் சாத்தியப்படுத்த முடியுமா ? இல்லை வேறு சாத்தியங்கள் உண்டா என்பதைப்பற்றிய சட்ட ரீதியிலான ஆலோசனைகளும் எங்களுக்குத் தேவைப்படுகின்றன.

நண்பர்கள் ,கலையிலக்கியத்தில் ஈடுபாடு கொண்டோர்  மேம்படுத்தலுக்கான ஆலோசனைகளையும் ,பங்களிப்புகளையும் .ஒத்துழைப்பையும் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.இந்த பதிவிலேயே இதில் பங்கெடுக்க விரும்புவோர் தங்களை பதிவு செய்யலாம்.அதனை வைத்து நாங்கள் அவர்களைத் தொடர்பு கொள்வோம்.

எங்கள் செயல்பாடுகள் பேரில் நம்பிக்கை கொண்டோர்  ,நண்பர்கள் தங்களையும் எங்களுடைய இந்த பயணத்தில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.தனித்து எதுவுமே சாத்தியமில்லை.

சாதி மத இன மொழி பால் வேறுபாடுகள் எதுவும் இதற்கில்லை

புறக்கணிக்கப்பட்டோருக்கான உறைவிடம் "நிழற்தாங்கல்"

தொடர்பு எண் - 93626 82373

Comments

Popular posts from this blog

வெயிலாள் டிரேடர்ஸ் - திறப்பு விழா அழைப்பிதழ்

அழகிய புது மனைவி உட்பட ஐந்து கவிதைகள்

"புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்"