"சிலேட்" காலாண்டு இதழ் சந்தா இயக்கம்,"சிலேட் விருது "

"சிலேட்" காலாண்டு இதழ் சந்தா இயக்கம்
சிலேட் இதழுக்காக சந்தா சேகரிப்பு .
உங்கள் பகுதியிலிருந்து பத்து சந்தாதாரர்களை ஒருங்கிணைத்து "சிலேட்" சந்தா இயக்கத்திற்கு உதவ உங்களால் இயலுமெனில் நாங்கள் உங்களை நேரில் சந்தித்து சந்தாவைப் பெற்றுக் கொள்வோம்.உங்கள் பகுதியில் உள்ள எங்களுடைய வாசகர்களோ,நண்பர்களோ அல்லது நாங்களோ ; உங்கள் சிரமத்தைப் போக்கும் வகையில் உங்களை நேரில் சந்தித்து பெற்றுக் கொள்கிறோம்.
பத்துபேர் இணைந்து நீங்கள் உருவாக்குகிற கவிதை , இலக்கியம்,அறிவு தொடர்பான சிறு கூட்டங்களுக்கும் நாங்கள் வருகை தருகிறோம்.உரையாடலையும் சேர்ந்து சாத்தியப்படுத்துவோம்.சிறிய சிறிய எத்தனிப்புகளால் பெரிய காரியங்களும் சாத்தியமாகிவிடலாம்.
தமிழ்நாட்டில் இதழின் ஓராண்டு சந்தா ரூ 400/-
இரண்டாண்டு சந்தா ரூ 800/-
மூன்றாண்டு சந்தா ரூ 1200/-
தொடர்பு எண் - 8220386795
விபரங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
நான்குபேர் சேர்ந்தால் அது "நடை"
அதுவே நாற்பது பேர் இணைந்தால் "ஊர்வலம்" தேர்வீதி வலம்.
சிலேட் இதழின் பயணத்தில் புரவலர்களாக தங்களை இணைத்துக் கொள்ள விரும்புவோரும் தொடர்பு கொள்ளுங்கள்.
ஒத்துழைப்பு தாருங்கள்
வித்தியாசமானதொரு காரியத்தை தமிழில் இணைந்து
முயற்சி செய்வோம்.
வாழ்நாள் கலை  மற்றும் இலக்கிய   பங்களிப்பிற்கான

"சிலேட் விருது " ஒன்றினையும் சிலேட் இதழ் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.ஒரு தமிழ் பேராசிரியரின் ஒரு மாத சம்பளத்திற்கும் குறையாத தொகையுடன் கூடிய பெருமையாக இது அமையவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.உங்கள் ஒத்துழைப்பு அமையுமாயின் இந்த கனவு வருகிற ஜனவரியிலேயே நனவாகிவிடும்.

No comments:

Post a Comment

அப்பச்சி காமராஜர் ...

அப்பச்சி காமராஜர் ... காமராஜ் பற்றி "நீயா நானா " விஜய் டிவி ஷோவில் பேசுவதற்காக ஆன்டனி ஒரு வாரம் முன்னதாக அழைத்தார்.நான் வர...