மைதானவெளியில் நீண்டுபறந்த செம்போந்து

மைதானவெளியில் நீண்டுபறந்த செம்போந்து உள்காட்சியில் இறங்கி வந்தமர்ந்தது
ஒரு கிளையசைவு போலும் இல்லாத அம்சகணம் பிரசன்னம்
நிச்சலனத்தின் உள்காட்சியை வெளியில் விட்டேன்
பத்துப்பதினைந்து பறவைகள்
சீர்வரிசை குலையாமல்
திறந்து வெளியேறி
நீந்துகின்றன தேவ ஸ்வரூபத்தில்
வெளிகாட்சியெல்லாம் உள்காட்சியாய் உருமாற
உள்காட்சியெல்லாம் வெளிக்காட்சியாய் நீந்துமோயென்
மாயக்கோபாலா !
உள்மலச் சூடன்றோ உன்
வெளிவழிப் பயணம்?

No comments:

Post a Comment

நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார் - வெட்டியெறிந்த வலி. சி .மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை ...