படைப்பு மின்னிதழில்- லக்ஷ்மி மணிவண்ணன் நேர்காணல்

லக்ஷ்மி மணிவண்ணன் நேர்காணல் முகமது மதார் 1 கவிதையை முதன்முதலில் எங்கு சந்தித்தீர்கள் ? முதல் கவிதையை கண்டடைந்த அனுபவம் எனில் "ஆடும் முகங்களின் நகரம் " என்ற தலைப்பில் தொண்ணூறுகளில் என நினைவு "இன்டியா டுடே "இலக்கியச் சிறப்பிதழில் வெளிவந்த கவிதையைச் சொல்வேன்.பெரு நகருக்குச் சென்று திரும்பும் வழியில், நகர் கடந்ததும் சாலையிலும் அதன் ஓரங்களிலும் பெருகிய தனிமையைக் கண்டடைந்த கவிதையைச் சொல்லலாம்.சுந்தர ராமசாமியும்,தோப்பில் முகம்மது மீரானும் சிலாகித்த கவிதை அது.இவ்வளவு சிறிய வயதில் இப்படி எழுத முடிவது ஆச்சரியமானது என்று தோப்பில் நண்பர்கள் மத்தியில் வைத்து அந்த கவிதை பற்றி பேசினார்.நெருங்கிய நண்பர்கள் பலரிடம் அந்தக் கவிதையைப் படித்தீர்களா என்று சுரா கேட்டுக் கொண்டிருந்தார். 2 ஒரு கவிஞனால் கவிதையை வைத்துக் கொண்டு என்ன செய்து விட முடியும்? குடும்ப அநீதிகளில் துயருற்று வாடிய காலங்களில் ,சிறு பிராயத்திலேயே கவிஞர்கள் எனக்கு உவப்பானவர்களாக ,ஏதோ ஒருவிதத்தில் தர்மத்தை நிலை நிறுத்துபவர்களாகத் தெரிந்தார்கள்.அல்லது அவ்வாறு புரிந்து கொண்டேன்.அதனை அவ்வளவு சரி என்று சொல்வதற்கில்லை.பாரபட்ச...